Eros theatre memories: Movie-going in another era

Posted on December 18, 2020

18


I received this on Whatsapp. It’s so brilliantly written, so evocative that I wanted to preserve this piece. (Plus, I was a frequenter of Eros theatre myself, and this write-up brought back so many memories — not necessarily of the films mentioned here, but of how movie-going used to be way back then.) Publishing with the permission of the author, Jayaraman Raghunathan.

”இடமா இல்லை நினைவுகளா…?”

கோலாகலமாகத்தான் நடந்தது கல்யாணம்.

சாந்தசுந்தர மஹால் நல்ல விஸ்தாரமாக ஆயிரம் பேருக்கு மேல் கொள்ளக்கூடிய கல்யாண மண்டபம் தான். எனக்கும் மிக நல்ல உபசரிப்பு. சாப்பாடு கன ஜோர். அதுவும் அந்த அவல் பாயசம், அதில் முழித்த முந்திரி. நாக்கு நுனியில் இரவு தூங்கும் வரை மிச்சமிருந்த அந்த பலாப்பழ வாசனையுடன் கூடிய சுகந்த இனிப்பு.

எனக்குத்தான் மனசில் ஒரு இழப்பு. .

”இன்னிக்கு வெள்ளிக்கிழமையாச்சே! வரும்போது போஸ்டர் பாத்துண்டு வந்துருடா!”

”சரிம்மா!”

இப்போது கேஎஃப்சி, Wonton, பிட்சா கார்னர் எல்லாம் ஜகஜ்ஜோதியாய் ஆட்சி செய்யும் கஸ்தூரிபாய் நகர் மூணாவது க்ராஸ் தெருவில் அப்போதெல்லாம் தார் ரோடு கூடக்கிடையாது. நவம்பர் வரை ஜாலியாக ஸ்கூலுக்கு நடந்து போய், இப்போது அம்பிகா இருக்கிறதே, அதற்கு எதிரில் கிண்டி ரோடைக்ராஸ் செய்து காந்தி நகருக்குள் புகுவோம். நவம்பர் மழை வந்து விட்டால் அந்த ரோடே முழங்கால் அளவு தண்ணி ஓடும் வாய்க்கால்தான். கிட்டத்தட்ட ஃபிப்ரவரிக்குதான் தெரு காயும். அது வரை இந்தப்பக்கமாகச் சுற்றிக்கொண்டு காப்டன் கலீலி வீடு வழுயாகத்தான் ஸ்கூலுக்குப்போகமுடியும்.

மொத்தமே மூணு பஸ் ஒரு கார் ரெண்டு ஸ்கூட்டர் என்கிற அளவில் இருக்கும் அப்போதைய கிண்டி ரோடு ட்ராஃபிக்குக்கே அம்மா,”பாத்து க்ராஸ் பண்ணு” என்று ஆயிரம் ஜாக்கிரதை சொல்லி அனுப்புவாள்.

இந்த மேற்சொன்ன கஸ்தூரிபாய் க்ராஸ் தெரு இருக்கிறதே, அது போய் கிண்டி ரோடை முட்டி தன் சுயமிழக்கும் அந்த இடத்தில் தான், அதுதான் இப்பொதைய அம்பிகா டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோருக்குப்பக்க வாட்டில், ரோடுக்கு இரு புறமும் கிட்டத்தட்ட Triumph de Arc இன் சின்ன சைஸ் போல இரண்டு வேலைப்பாடுகள் செய்த தூண்கள்  இருக்கும். ஏதோ ஒரு காங்கிரஸ் பூண்ணியவானை கௌரவப்படுத்த அதைக்கட்டி அவர் பெயர் பொறித்திருக்கும் என்று சொல்வார்கள். அதை நாங்கள் பார்தத்தே இல்லை எப்போதும் சினிமா போஸ்டர் மறைத்திருக்கும்!

அந்தத்தூண் தான் வாராவாரம் வெள்ளிக்கிழமை என்ன சினிமா என்று எங்களுக்குத்தெரிவிக்கும். எப்போது ஒட்டுவார்கள் என்றே தெரியாமல் வெள்ளிக்கிழமை காலை எட்டேகாலுக்கு ஸ்கூல் போகும்போது அந்த வாரம் என்ன சினிமா என்று பார்த்துவிடலாம்,!

வெள்ளிக்கிழமை நான் போஸ்டர் பார்த்து சொல்லிவிடுவேன். அன்னிக்கு அப்பா ஆஃபீசிலிருந்து வந்தவுடன் திட்டம் தீட்டப்பட்டு விடும்.

“நாளைக்கு நீங்க வரும்போதே டிஃபன் சாப்ட்டு வந்துடுங்க! ரத்திரிக்கு ரசம் வெச்சு அப்பளாம்தான்”

ஆறு மணிக்கு அப்பா வந்தவுடன் கிளம்புவோம். ஆறேகாலுக்குப்போனால் ஈ அடிக்கும். வாசலில் இருக்கும் மஞ்சள் கவுண்டரில் ரிடயர்ட் போலீஸ் கான்ஸ்டபிள் தான் டிக்கட் கிழித்து கொடுப்பார். ஆறரைக்கு கவுண்டரை மூடிவிட்டு, வாசலில் போய் கேட்டை இழுத்து மூடுவார். அதுவரை அந்த மாடிப்படி அடியில் நின்று பீடியை வலித்துக்கொண்டிருக்கும், அழுக்கு வேஷ்டி, எவர்சில்வர் பொத்தான் ஜிப்பா ஆசாமி விறு விறு வென மாடிக்குப்போய் ப்ரொஜக்டரை ஆன் பண்ணுவார்.

நாங்கள் உள்ளே நுழையும்போது 48 பைசா 64 பைசா சீட்டுக்களில் ஓரளவுக்கு கூட்டமிருக்கும். .1.25இல் பத்து பன்னண்டு பேர் இருந்தால் உத்தமம். 1.64இல் எங்களைத்தவிர இன்னொரு குடும்பம் அதிக பட்சம். மேரா நாம் ஜோக்கருக்கு மட்டும் மொத்த கொட்டகையும் ஹவுஸ்ஃபுல்லாகியது ஒரு சரித்திர நிகழ்வு. அது ராஜ்கபூரின் அபார டைரக்‌ஷனுக்காக என்று நான் ரொம்ப நாட்களுக்கு தப்பாக நினைத்துக்கொண்டிருந்தேன்.

”உள்ளம் உருகுதைய்யா”

டிஎம்எஸ் கீறல் விழுந்த ப்ளேட்டில் பாடுவது எனக்கு ஒரு வரி பிசகாமல் இப்போதும் தெரிவதன் பின்னணி படம் ஆரம்பிக்கும் வரை இதே பாட்டை திரும்பத்திரும்ப போடுவார்கள்

சட்டென்று ஒரு ஆச்சரிய கணத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டு, எங்கோ தூரத்தில் ரொட்டார் மோட்டர் சிலுப்பிக்கொண்டு விர்ர்ரென்று சப்திக்கும்.தாமஸ் ஆல்வா எடிசனின் உபயத்திக்ல் திரை உயிர் பெற்றவுடன் அதில் “புகை பிடிக்காதீர், முன் சீட்டில் காலை வைக்காதீர், டிக்கட் இல்லாவிட்டால் போலீஸில் பிடித்துக்கொடுக்கப்படும்,.என கோணாமாணா கையெழுத்தில் எழுதின ஸ்லைடுகள் வெவ்வேறு ஆங்கிளீல் தோன்றி சட் சட்டென மறையும். தொடர்ந்து பூங்கொடி டைலர்ஸ், வெங்கட்ரமணா இனிப்பு கடை, மருதம் நாட்டு மருந்து, சீனிவாச டெக்னிகல் இன்ஸ்டிட்யூட், யுவராஜ் சித்த வைதிய சாலை என்று வர்ஜ்யாவர்ஜ்யமில்லாமல் விளம்பரப்பலகை போடுவார்கள். நான் தினசரி மூன்று காட்சிகள் ஸ்லைடுக்காகவே காத்திருப்பேன், எப்போதும் அதுதான் கடைசி ஸ்லைட்!

இண்டர்வெல்லில் நமுத்துப்போன பாப்கார்ன் சாப்பிடுவதை ஒரு கடமையாகச்செய்வேன்.

”எங்கூட்டம்மா வந்திருக்காங்க” என்று 48 பைசா சீட் பக்கமிருந்து பின்னால் என் அம்மாவைப்பார்த்து கூச்சல் போட்டு குதூகலிக்கும் வீட்டு வேலை செய்யும் வள்ளி போன்றவர்களின் அந்தக்கால இன்னசன்ஸ் இன்று இல்லாதிருப்பதைக்கவனிக்கிறேன். மரியாதையும் கூடத்தான்.

முதல் முறை தனியாகப்படம் போகக்கிளம்பி, பயந்துகொண்டே தியேட்டர் வரை போய்விட்டு “டிக்கட் கிடைக்கலைம்மா” என்று பொருந்தாத பொய் சொல்லி அம்மாவிடம் திட்டு வாங்கினது ஒரு அனுபவம்.

Snow white and the 7 Dwarfs என்ற படத்துக்கு போன போது டிக்கட் தர மறுத்துவிட்டார்கள்.

“சார்! இன்னிக்கு படம் கிடையாது! மொத்தமே மூணு குடும்பம்தான்! கட்டுப்படியாகாது!

”அம்மா! இந்த வாரம் இங்க்லிஷ் படம்!

“என்ன படண்டா?”

ஏதோ பிஸ்கோன்னு போட்ருந்தது!’

என்னது பிஸ்கோவா? என்ன ஸ்பெல்லிங்?”

PSYCHO!”

மக்கு! அது சைக்கோ!”

போலாம்மா!

ம்ஹூம் அது பயங்கர படம்! நீயெல்லாம் பாக்கப்படாது!”

காலேஜ் வந்ததும் அதே படத்தை மிட்லேண்டிலும் பின் பைலட்டிலும் பார்த்து ரசித்ததும் ஹிட்ச்காக் என் வீட்டு சுவாமி அலமாரியில் இடம் பிடித்ததும் என் வாழ்வில் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டியவை!

பல்லவ செல்வங்கள் என்று ஒரு படம். ராமராவ், காந்தா ராவ் என்று பல ராவ்கள் நடித்த சாகசமான சண்டைப்படம் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலைக்காட்சி நான், சுரேஷ், சங்கர் பாபு எல்லோரும் போனோம். மஹா அதிசயமாக 48, 64 பைசாக்களில் நல்ல கூட்டம். சோகையான ஒரு அருவியில் ராஜஸ்ரீ குளிக்கும் காட்சிக்காக என்று அப்போது தெரியவில்லை.

டிக்கட் வாங்கி வாசலில் கதவு திறக்கக்காத்து நின்று பேசிக்கொண்டிருக்கும்போது என் வயதேயொத்த ஒரு சிறுவனை அந்த ரிடயர்ட் போலீஸ் ஆசாமி அடி அடி என்று அடித்து இழுத்து வந்ததைப்பார்த்த போது திக்கென்றிருந்தது.

“இங்க என்ன தர்மத்துக்கா படம் போடறாங்க! திருட்டு நாயே!. டிக்கட் வாங்கத்துப்பில்ல, சினிமா கேக்குதோ!”

அவன் வாயில் ஒழுகிய ரத்த நூல் இன்றும் சில சமயம் என் கனவுகளில் வருவதுண்டு.

எத்தனையோ படங்கள்! பல திராபை. சில வெகு நல்லவை.

மழையில் நனைந்து கோண்டே போன நம்ம வீட்டு தெய்வம், திரும்பவரும்போது ஆக்ஸிடெண்டைப்பார்த்த மீண்டும் வாழ்வேன், பப்ளிக் எக்ஸாமுக்கு முந்திய நாள் பார்த்த தேவரின் தெய்வம், பாதி பார்க்கும்போது அம்மாவுக்கு லேசாக மயக்கம் வந்து நான் பயந்து போய் இன்றும் மறக்க இயலாத பதட்டத்துடன் ரிக்‌ஷாவில் வந்த ஷரீஃப் பத்மாஷ், நான்கு நாட்கள் தொடர்ச்சியாகப்பார்த்த சீதா அவுர் கீதா, வைகுண்ட ஏகாதசிக்கு பின்னிரவில் பார்த்த நந்தனார், டைட்டிலோடு தூங்கிவிட்ட வேதாள உலகம், லதாவுடன் முதலில் பார்த்த மௌன ராகம்…….…

மிக இனிமையான நாட்கள்.

அந்த இடத்தை சாந்த சுந்தர மஹால் கல்யாண மண்டபமாகப்பார்க்கும்போது என்னுள் எதையோ இழந்த வருத்தம். இந்த இடம் கல்யாண மண்டபமாகவோ மிட்சுபிஷி கார் ஷோரூமாகவோ இருக்கவே முடியாது.

ஒரு சிறுவனின் இனிமையான அனுபவங்களுக்கு மூல காரணமான ஈராஸ் தியேட்டராகத்தான் இருக்க வேணூம், என்றென்றும்.

என் மனசில் அப்படித்தான் இருக்கிறது.

(Translation by Sedhupathy M)

The wedding was quite lively indeed.

‘Santhasundara Mahal’ was also a grand place which could serve more than thousand guests. I was given a good welcome too. The food was amazing as well. Especially that rice payasam, that whole cashew nut, that jackfruit tinged sweetness that stayed in my mouth till I slept at night.

Yet I felt I had lost something precious.

‘Is it not Friday today? Don’t forget to see the poster while you return.’

‘Okay, Amma.’

The same Kasturibai Nagar – 3rd Cross Street, in which the gleaming KFCs, Wontons, Pizza Corners, and whatnot rule now, did not even have a Tar road back then. Until November, we would go to school by foot by crossing the Guindy Road, opposite where we have Ambika now, and entering Gandhi Nagar. When the monsoons arrived in November, the road would become a full-fledged canal with knee-deep water. It wouldn’t dry before February. Until then, you could go to school only by detouring this way through Captain Galilee’s (?) house.

Even though the entire traffic in that Guindy Road consisted of three buses, one solitary car, and two scooters, Amma would nevertheless caution us several times to ‘cross the road carefully’ before sending us off.

This above mentioned Kasturibhai Nagar – 3rd Cross Street goes and touches the Guindy Road before losing its self. In that spot, besides what is now Ambika Departmental Store, there used to be two pillars on either side of the road like a miniature Triumph de Arc with intricate designs. People used to say the structure was built to honor a Congress gentleman with his name on it. But we had never seen his name. We had only seen the cinema posters that hide it.

It was that pillar which informed us every Friday what was the movie that week. No idea when they’d paste it, but by the time you go to school at 8.15 on Friday, you could see the poster of the movie.

By Friday evening, I would have informed the family about the movie. When Appa returned from office, the plan would be finalized.

‘Tomorrow, have your dinner while you come back from office. Only rasam and appalam for the night.’

We’d leave as soon as Appa comes back at 6. When we reach by 6.15, there would be no one. In that yellow counter out in the front yard, a retired police constable would tear our tickets and give us. By 6.30, he would shut the counter and close the outside gate. The fellow who was smoking a beedi until then below the staircase, wearing a dirty veshti and a jippa with ever-silver buttons, would climb up the stairs in a hurry to switch on the projector.

When we go inside, there would be some crowd in the 48 paisa, 64 paisa sections. A dozen people could be expected in the 1.25 section. In 1.64, there would at most be one more family apart from ours. When the theater became housefull for Mera Naam Joker, it was a historical event. For a long time, I was under belief that that was because of Raj Kapoor’s amazing direction.

‘Ullam Uruguthaiyya…’

I could still hear TMS singing every line of the song through old, overused vinyl records because they would play that song on loop until the movie begins.

Suddenly, in one magical moment, the lights would go out. Somewhere in the distance a motor would shake itself and begin to roar. When the screen comes to life, thanks to Thomas Alva Edison, there would be slides like ‘Don’t Smoke, Don’t Rest Your Legs On the Front Seat, Persons Without Tickets Will Be Handed Over To Police’. Carelessly written letters would appear and disappear in various angles. Following which, there would be indiscriminate advertisement slides: ‘Poongodi Tailors, Venkat Ramana Sweet Shop, Marudham Herbal Medicine, Srinivasa Technical Institute, Sivaraj Siddha Vaidya Salai’. I would be waiting for the ‘Daily 3 Shows’ slide, that would be the final one.

I’d dutifully eat the stale popcorn in the interval.

‘Our house Amma has come!’

From the 48 paisa section, our housemaid Valli would call out to my mom in the back cheerfully. I notice we have lost that innocence, not to mention the respect, of those days.

Once I wanted to watch a movie by myself, went until the theater somehow, but chickened out in the end. When I tried telling my mom that I didn’t get a ticket, I was scolded by her. I still remember that.

When we went to a movie called Snow White and the Seven Dwarfs, they refused to give tickets. ‘Sir, there’s no show today. Only three families have come. We can’t afford it.’

‘Amma, it is an English movie this week.’

‘Which movie is it?’

‘Something called Pisco.’

‘Pisco? What’s the spelling?’

‘P-S-Y-C-H-O’

‘Idiot! That is Psycho.’

‘Amma, let’s go.’

‘Nope. That is a horror film. You can’t watch it.’

That I enjoyed the same film in Midland and then in Pilot while I was in college, and placed a picture of Hitchcock among our Gods in my house shelf, were some of the highlights of my life.

A movie called Pallava Selvangal. Starring Rama Rao, Kanta Rao, and several other Raos. An action adventure. One Sunday, Suresh, Shankar, Babu and myself went to the morning show. Surprisingly there was such a crowd in the 48 and 64 paisa sections. We did not know it back then that that was for the scene where Rajasree takes bath in a waterfall.

Some other day, when I was waiting for the gate to open after getting the ticket, I saw that retired police constable beat up a boy of my age and drag him outside. ‘Do they show movies for Dharma here? Thieving dog! You can’t afford the tickets yet you want to watch movies, is it?’ The blood that he spit that day, I still see it sometimes in my nightmares.

So many movies! Several were trash. But some were really good.

Namma Veetu Deivam to which we went drenched in rain; Meendum Vaazhven from which when we returned we saw an accident; Devarin Deivam, I saw the day before my public exam; Shareef Budmaash during which Amma fainted, I got scared, and we returned home in a rickshaw; Seeta Aur Geeta, we saw four times in four consecutive days; Nandanar, we watched on the night of Vaikunta Ekadasi; Vedala Ulagam, I slept after the title cards.

Mouna Ragam was the movie I watched with Latha for the first time.

Such beautiful days.

When I saw the same place as the ‘Santhasundara Mahal’, I felt a pang of terrible loss inside me. This place cannot be a wedding hall at all. Nor can it be some Mitsubishi showroom. This place, that brought endless joy to that small boy, can only be Eros Theatre. Forever.

In my heart at least, that is how it is.

Posted in: Cinema, Society