Tanglish Talks: “At the rehearsal”

Posted on March 28, 2021

11


I keep writing scenes and other random stuff. Thought they’d make for fun blog posts, titled ‘Tanglish Talks’. Do read, share, mock, comment, ring the bell icon, whatever 🙂 !

SCENE

“Acting-ல “Method”-னு சொல்லுவாங்க. அதாவது ஒரு சோகமான scene-ல நடிக்கணும்-னா தனக்கு வாழ்க்கையிலே நடந்த சோகங்களை ஞாபக படுத்தி நடிக்கறது. நீ அந்த மாதிரி பண்ணுவியா?”–னு நான் கேட்டப்போ அவ என்ன ஒரு மாதிரியா பாத்தா.

ரெண்டாவது நாள் rehearsal. மொதல் நாள் தான் meet பண்ணோம். அவ stage-ல புலி, இது, அது-னு என்னென்னமோ கேள்விப்பட்டிருக்கேன். அவள impress பண்ணறதுக்காக அந்த question கேக்கலே. எனக்கு நடிக்க வருமா-னு தெரிஞ்சிக்க கேட்டேன்.

சின்ன வயசிலேந்தே நடிக்கணும்னு… வெறி லாம் இல்லே… ஆசை. பரத்வாஜ் ரங்கன் reviews-லாம் படிப்பேன். ஒரு காலத்துல English films மட்டும் review பண்ணுவாரு. Hindu-ல. அப்ப அவரு “method, “method”-னு நெறய reviews-ல சொல்லுவாரு.

ரொம்ப flashback-ல போயிட்டேன்-ல? எங்க இருந்தேன்? ஆங்… அவ என்ன ஒரு மாதிரியா பாத்தா. “நான் actress-ங்கறத தவிர என்ன பத்தி வேற எதாவாவது தெரியுமா”-னு கேட்டா.

புரியல. “நீ actress தானே?-னு சொன்னேன். திரும்பி கேட்டா. “So, வேற எதுவுமே கண்ணுக்கு தெரியல!”

ஏன் டா இந்த topic-அ எடுத்தோம்-னு நெனக்கருதுக்குள்ள பேச ஆரம்பிச்சா. “நா ஒரு பொண்ணு. Red colour-ல top போட்டிருக்கேன். வலது கண்ணுல மை கொஞ்சம் கசங்கி இருக்கு. என் கையில oxidised bangle இருக்கு. இதுல ஒண்ணு கூட கண்ணுல படலியா?

ஏதோ பெரிய தத்துவம் வரப்போகுது-ங்கற feeling-ல தலையை லேசா ஆட்டினேன். “My teacher told me, acting–னா மொதல்ல கவனிக்க கத்துக்கணும். எனக்கு தெரிஞ்ச ஒரே “method” அது தான். Stage-ல என் பக்கத்துல இருக்கும் போது நீ என்ன சொல்லறே, எப்பிடி சொல்லறே, dialogue-ல ரெண்டாவது வார்த்தை-ல pause விடறியா இல்ல அஞ்சாவது வார்த்தைல-யா, நீ ஒக்காரும்போது கூன் விழுதா, அந்த கூன பாத்து எனக்கு ஏதாவது improvise செய்ய தோணுதா… இதெல்லாம்தான் எனக்கு தெரிஞ்ச ‘method’.”

Sorry-னு சொன்னேன்.

ஏன்-னு கேட்டா.

ஒன்ன ஒரு முழு human being-ஆ பாக்காம just ஒரு actress-ஆ மட்டும் பாத்ததுக்கு-னு சொன்னேன்.

சிரிச்சா. “But நான் actress தானே?-னு சொன்னா.

Director வர்ற சத்தம் கேட்டுது. அவ dialogue sheet-அ கையில எடுத்து படிக்க ஆரம்பிச்சா. ஒரு jeans-போட்ட கால இன்னொரு jeans-போட்ட கால் மேல மடக்கினா. கோல்ஹாப்பூரி சப்பல் மேல பாதி கொலுசு — sorry, sorry, oxidised கொலுசு தொங்கிச்சு.

என்னோட dialogue sheet-அ பாக்க ஆரம்பிச்சேன். First line-ஏ chair-ல ஒக்காந்து பேசற மாதிரி scene. கூன் விழுமா-னு யோசிச்சேன்.

Posted in: Tanglish Talks