I keep writing scenes and other random stuff. Thought they’d make for fun blog posts, titled ‘Tanglish Talks’. Do read, share, mock, comment, ring the bell icon, whatever 🙂 !
நேற்றிரவு தூக்கம் வரவில்லை.
(கோபம் வந்தால் தூக்கம் வராது.
உங்களுக்கும் இப்படி தானா?)
நெருங்கிய நண்பியுடன் பேசி கொண்டிருந்தேன்.
பேச்சு வார்த்தையில் அவள் ஒருவன் கையில்
பட்ட கொடுமைகளை விவரித்தாள்.
உடல் கொடுமைகள் அல்ல.
மன காயங்கள்.
அவள் மூளை சுரங்கத்துக்குள் எங்கோ புதைந்திருந்த
இந்த கேவலமான கருங்கற்கள்
திடீரென்று
தொலைபேசி அலைகளில் மிதக்க ஆரம்பித்தன.
அவன் அப்படி செய்தான்.
அவன் இப்படி செய்தான்.
கேட்க கேட்க எனக்குள் ஒரு தத்தளிப்பு.
இதை பற்றி ஒன்றும் செய்ய முடியவில்லையே!
அப்பவே சொல்லியிருந்தால் என்ன செய்திருப்பேன்?
ஏதாவது செய்திருக்க முடியுமா, முதலிடத்தில்?
அந்த உரிமை எனக்கு இருந்ததா?
அவள் கேரட்-தக்காளி விலை என்ன
என்ற ரீதியில் இதெல்லாம் சொல்ல சொல்ல
என் தத்தளிப்பு கோபமாக மாறியது.
இப்படியும் ஒரு மனிதனா!
இது ஒரு விஜயகுமாரி படமாக இருந்திருந்தால்
அந்த அரக்கனிடம் இவ்வசனத்தை பேசியிருப்பேன்:
“உனக்கு மனசாட்சியே இல்லையா?”
(அனால் என்ன பிரயோஜனம்? இல்லை என்பது தானே உண்மை!)
“உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி.”
என்று கண்ணதாசனும்
அதற்கு முன்பு பாரதியும் எழுதினார்கள்.
கவித்துவம் தான்.
அனால் கோழைத்தனம் கூட.
மஹாகவிகளை குறை சொல்ல வில்லை.
என் நேற்றைய மனநிலையை விவரிக்கிறேன்.
“உன் கண்ணில் நீர் வழிந்தால், என் நண்பியே,
அந்த கண்ணீருக்கு காரணமானவனை
கும்-கும் என்று மொத்தி எடுத்திருப்பேன்.”
என் கவிதை இப்படி போயிருக்கும்.
இரணியன் மாதிரி அவன் குடலை உனக்கு மாலையாக்கியிருப்பேன்.
சரி, சரி, இதெல்லாம் கவித்துவமான பீலா தான்.
எனக்கு அந்த பலமெல்லாம் கிடையாது.
அனால் யோசித்து பார்க்க,
என் கோபம் தணிய,
எங்கள் தொலை-உரையாடல் முடிந்து
படுக்கையில் புழு போல்
இப்புறமும் அப்புறமும் திரும்பிக்கொண்டிருந்த போது
என்னை தேற்றிய எண்ணங்கள் இவை.
ஏன் நண்பி இவ்வளவு நாளாக
இதெல்லாம் உனக்குள் பூட்டி வைத்திருந்தாய்?
இப்போது உனக்கு தெரியும்
என் கையில் ஒரு மந்திர சாவி இருக்கிறது என்று.
பூட்டை திறக்கிற சாவி அல்ல
பூட்டை பிளக்கிற சாவி.
உன் மூளை சுரங்கத்துக்குள் புதைந்த
அழுக்குமூட்டைகளை
விளம்பர-பளிச்-வெண்மையாக்கும் சாவி.
அது என் தோள் தான்.
நீ அன்றைக்கே அதில் சாய்ந்து பேசியிருந்தால்
இன்றைக்கும் உன்னுள் இவ்வளவு
விஷக்கொந்தளிப்பு இருக்குமா?
இனிமேலாவது கேள்.
பேசு.
பேசு.
பேசு.
பேசு.
மன கனம் கால் கிலோ குறையும்.
அப்பறம் அரை கிலோ
அப்பறம் முக்கால் கிலோ…
ஆனால் பொய் சொல்ல மாட்டேன்,
முழுவதாக குறையாது.
அது தான் இந்த மன கனத்தின் விசேஷம்.
அந்த சுரங்கத்தை முழுவதாக
சுரண்டி எடுக்க முடியாது.
வாழ்க்கை பூரா வால் போல உன்னுடன் வரும்.
(இரணியனை பற்றி பேசிவிட்டு
இப்போ அனுமானின் அவதாரம் என்கிறேனே?
சிரிப்பு வருகிறதா?
இந்த மாதிரி பாய்ந்து தாவுவது… அதான் என் விசேஷம்.)
ஆனால் உனக்கு வால் இருந்தால்
எனக்கு தோள் இருக்கிறது.
வாலை சுருட்டி அதில் வை.
நான் வண்ணாத்தி மூட்டை போல் சுமந்து கொள்கிறேன்.
ஆனால் இப்பொழுது, இந்நேரம்…
நேற்றிரவு அளவு இல்லை என்றாலும்
என் உதிரத்தில் ஓடும் கொதிப்பு…
அதை தணிக்க நான் யார் தோளை தேடுவது?
sai16vicky
July 8, 2021
The last line is lovely (something I can totally relate to). I am reminded of the following line (courtesy Kannadasan): ‘Ellorum nalam vaazha naan paaduven, naan vaazha yaar paaduvaar!’.
LikeLiked by 1 person
Sudha
July 8, 2021
Great flow BR.
“உன் கண்ணில் நீர் வழிந்தால், என் நண்பியே,
அந்த கண்ணீருக்கு காரணமானவனை
கும்-கும் என்று மொத்தி எடுத்திருப்பேன்.”
என் கவிதை இப்படி போயிருக்கும்.
இரணியன் மாதிரி அவன் குடலை உனக்கு மாலையாக்கியிருப்பேன்.
சரி, சரி, இதெல்லாம் கவித்துவமான பீலா தான்.
எனக்கு அந்த பலமெல்லாம் கிடையாது.
அனால் யோசித்து பார்க்க,
என் கோபம் தணிய,
எங்கள் தொலை-உரையாடல் முடிந்து
படுக்கையில் புழு போல்
The above reminds me of classic Sujatha. Combination of traditional and nakkal.
I have to admit, I didn’t expect this Thamizh ootru from you. Sorry about what happened though.
LikeLiked by 1 person
brangan
July 8, 2021
Thanks, saivicky and Sudha. This did not happen to me, but to a friend. I just felt helpless about not knowing about this earlier, not being able to help earlier.
“I didn’t expect this Thamizh ootru from you…”
Aha, do not judge a book by its (English) cover 😛
LikeLiked by 5 people
Venky Ramachandran
July 8, 2021
“ஆனால் உனக்கு வால் இருந்தால்
எனக்கு தோள் இருக்கிறது.
வாலை சுருட்டி அதில் வை”
Nice way to describe the joys and agonies of listening to someone. It has a tragicomic feel that one might imagine Vivek or Alex to write in their moments of agony.
LikeLike
Voldemort
July 8, 2021
“சரி, சரி, இதெல்லாம் கவித்துவமான பீலா தான்.”
“வாலை சுருட்டி அதில் வை.
“அது தான் இந்த மன கனத்தின் விசேஷம்.
அந்த சுரங்கத்தை முழுவதாக சுரண்டி எடுக்க முடியாது.”
நான் வண்ணாத்தி மூட்டை போல் சுமந்து கொள்கிறேன்.”
Wah, beautiful piece saar.
Oh and I didnt know Nanbi was an actual word. I thought it’s only used these days in films and in social media.
I have to admit, I didn’t expect this Thamizh ootru from you.
Haha I’m guilty of the same too.
And on what happened to this friend, it’s extremely upsetting and unsettling that we could do nothing to help ourselves or someone we know. It haunts us forever – we/they might have recovered from it – but the helpless feeling you get when you know you haven’t and cannot do anything is terrible
LikeLike
Priya Arun
July 8, 2021
This is so beautiful, BR-saab. Visiting your page after ages and I see this! This piece is so honest, free of any frills and affectations. Therefore becomes so relatable.
(I cannot read Tamil fluently, it was worth the effort, I’d say)
LikeLike
vijee
July 9, 2021
“கவித்துவமான பீலா” — super!
LikeLike
vijee
July 9, 2021
Let’s just say: None of us expected this Thamizh ootru from you 🙂
LikeLike
Karthik
July 9, 2021
This was lovely, BR! An effortless read. And the metaphors seem so “native” to the language. I really like this series. Please keep posting.
LikeLike
Enna koduka sir pera
July 9, 2021
அருமையோ அருமை!
சற்றும் எதிர்பார்க்கவேயில்லை
BR இடமிருந்து தமிழ் அலைபாயும் என்று
அதுவும் அழகான அலைகள்
இவ்வுலகிலும் உண்டோ இதுபோல்
தமிழிலும் புலமை
ஆங்கிலத்திலும் மேதைமை
நீங்கள் இரண்டிலும் எழுதி கொண்டேயிருக்க
என் வாழ்த்துக்கள்!
LikeLike
Kay
August 15, 2021
I’m glad she finally opened up to you BR. Hope she got rid of the guy for good and better times await her. Unfortunately this is something I have become used to. One too many friends who endure unhappy and abusive marriages/relationships for various reasons.
LikeLike
H. Prasanna
August 15, 2021
Good one, BR. Not to belittle any real feeling that you are trying to convey (I too have felt this way), couldn’t resist to insert an advise I often repeat…
Vaal in neelam thol kodukka therapist ai thedi…
LikeLike