I keep writing scenes and other random stuff. Thought they’d make for fun blog posts, titled ‘Tanglish Talks’. Do read, share, mock, comment, ring the bell icon, whatever 🙂 !
பாதை: எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை!
வீட்டிலிருந்து வசதி-அந்தஸ்துக்கேற்ற வண்டியில் ஏறி போகிறோமே…
அது வெறும் கல்- மண்-தார் ரோடு பாதை,
நான் அதை பற்றி பேசவில்லை.
I mean the metaphor.
இந்த அர்த்தத்தில்
அந்த வார்த்தையை கேட்டவுடன்
மனதில் எவ்வளவோ சகோதர-சகோதரி வார்த்தைகள்:
பயணம், தூரம், எதிர்காலம்…
(ஒரு சிறிய கவனச்சிதறல்:
ஆங்கிலத்தில் “path” என்ற வார்த்தையும்
தமிழில் “பாத்தி” என்ற வயல்-வார்த்தையும்
ஒன்று விட்ட உறவினர்களோ?)
Anyway…
விஷயத்துக்கு வருவோம்.
நாம் ஏன் முன் நோக்கி நடக்கிறோம்?
(நம் வசதி-அந்தஸ்துக்கேற்ற பூங்காவிலோ gym-இலோ
காலை உடற்பயிற்சி செய்யும்போது கூட!)
ஏனென்றால் நம் கால்களுக்கு அதுதான் பழக்கம்.
விளையாட்டாக வேண்டுமென்றால்
பின் நோக்கி நடக்கலாம்…
சீக்கிரமே முட்டி வலி வந்துவிடும்.
இதில் ஒரு தத்துவம் இருக்கிறது.
நான் டுமீலென்று மூளை வெடித்து இக்கணம் கண்டுபிடித்தது அல்ல.
நிறைய பேர் கண்டிப்பாக இதைப்பற்றி யோசித்திருப்பார்கள்.
அனால் எனக்கு இன்று காலைதான்
இது தோற்ற-வடிவமாக முன் வந்து நிற்கிறது.
(நேற்று ஏதோ எனக்கு இப்பொழுது ஞாபகமில்லாத
கனவு கண்ட ஆழ்மனது துப்பிய எச்சில் ஆகவும் இருக்கலாம்.)
பயணம், தூரம், எதிர்காலம்…
இது எல்லாம் நம் முன் இருந்தால் தான்
வாழ்க்கை ஒரு சுவாரசியமான
கேள்விக்குறியாக மாறுகிறது.
நாம் இதுவரை வந்த பாதை
நாம் இதுவரை கடந்த தூரம்
(நம் வயது என்று எடுத்துக்கொள்வோம்)
நாம் இதுவரை நடந்த நடை…
இதெல்லாம் அப்பப்போ நினைத்து பார்க்க
இரண்டு extra spoon போட்ட சர்க்கரை மைல்கல்களோ
அல்ல உப்பு-கரிக்க முகம் சுளிக்க வைக்கும்
வேதனை குமியல்களோ…
அவ்வளவுதான்.
அதுவே வாழ்க்கை என்று
தாடையை உள்ளங்கையில் சுமந்து கொண்டு
flashback-இல் வாழ்பவர்கள்
வலியில் வாழ்பவர்கள்.
நாம் விளையாட்டாக பின் நோக்கி நடக்கும்போது
ஒரு வலி வரும் என்று சொன்னேன் அல்லவா!
அந்த வலி தான்.
(முட்டி வலி மன வலியாக மாறுகிறது. அம்புடுதே!)
பாதை என்பது நம் கண்களுக்கு முன்னால்
நம் வசிக்கும் இன்றைக்கு முன்னால்
இருந்தால் மட்டுமே
ஒரு அழகிய அர்த்தம் அடைகிறது.
ஐம்பது வயதில் நான் இதை
இருபதுகளில், முப்பதுகளில், நாற்பதுகளில்
நம்பியதை விட இன்னும் வெறித்தநாமாக நம்புகிறேன்.
என் எதிரில் உள்ள காலம்
குறைந்து விட்டதென்பதர்க்காக அல்ல.
நாளையே…
ஏன், இன்றே யாரோ ஒருவரோட
வசதி-அந்தஸ்துக்கேற்ற வண்டி
என்னை வேகமாக இடித்தால்
என் பாதையின் திசை மாறிவிடும்.
(முடிந்துவிடும் என்கிறீர்களா?
ஹிஹி…
ஆவியாக உலவ வேண்டும்
என்று ஒரு நப்பாசை.
எனக்கு பிடித்தவர்கள்
என்ன செய்கிறார்கள்
என்று உளவு பார்க்கவேண்டுமென்றால்
அதுவே என் பாதையை
நிர்ணயித்து விடும் அல்லவா?)
அதுவரை என் பாதை முடியாது.
அந்த பாதையில் நான் தேடும்
லட்சியம் (‘இலட்சியம்’ என்றெல்லாம்
ரொம்ப formal-ஆக வேண்டாமே!)…
அதுவே ஒளி.
நான் நினைத்தது நடக்கிறதோ
அல்ல இறைவன்/விதி (take your pick) நிர்ணயிக்கும்
வேறு பாதை விரிகிறதோ…
எதுவாக இருந்தாலும்
ஒரு கை பார்த்து விடலாம்.
என்ன சொல்கிறீர்கள்?
Sudha
August 3, 2021
Thank you for this. I’ll say it again, your Tamil writing style reminds me of Sujatha, specifically his Srirangathu Dhevadhaigal.
This ‘padhai’ mind dialog is very relatable, as I am currently in the midst of an existential crisis.
I am really enjoying this Tanglish talks. Please continue.
LikeLike
brangan
August 4, 2021
Thank you, Sudha.
LikeLike
Enna koduka sir pera
August 4, 2021
Your Tamil writing is exquisite. Thank you for sharing.
LikeLike
brangan
August 4, 2021
Thanks so much, Enna koduka sir pera 🙂
LikeLike
Eswar
August 4, 2021
+1 to what ‘Enna koduka sir pera’ said. Especially your choices of words and phrase like – ‘சகோதர-சகோதரி வார்த்தைகள்’ and ‘ தோற்ற-வடிவமாக’ 🙂. Thanks, BR.
LikeLike
brangan
August 5, 2021
Thanks Eswar.
So glad this has a small audience.
A new film I am trying to write for a director begins with something like this. I have always writtenin Tamil, small thoughts and verses and all. But I think I did that for ‘myself’ – you know, like a diary.
Suddenly, the urge to share on the blog has happened — I think, partly to shock you all.
😂😂😂
LikeLiked by 3 people
Enna koduka sir pera
August 5, 2021
Shock you have done indeed! This was my comment to your last Tanglish Talks piece 🙂 (konjam mugasthuthi jaasthi than yen last lines la, but unmai!!)
“அருமையோ அருமை!
சற்றும் எதிர்பார்க்கவேயில்லை
BR இடமிருந்து தமிழ் அலைபாயும் என்று
அதுவும் அழகான அலைகள்
இவ்வுலகிலும் உண்டோ இதுபோல்
தமிழிலும் புலமை
ஆங்கிலத்திலும் மேதைமை
நீங்கள் இரண்டிலும் எழுதி கொண்டேயிருக்க
என் வாழ்த்துக்கள்!”
LikeLike
HughJackmanuDasan
August 8, 2021
BR Wow. I mean Wow. When i was reading it and please forgive me i was thinking this must be some Readers write in Stuff. Then as i was reading the comment it was you. How Stupid I was to underestimate you Tamil writing.. BR Please Please start writing more in Tamil!. Nowadays I don’t know I miss you Writings so much. May be Just an illusion as you are doing more videos and interview these days…But this is just amazing. And BTW you have 40 or 50 more years IN front of you like Subbudu..So Keep rocking and please keep those writing in Tamil coming…
LikeLike