Tanglish Talks: Darkness

Posted on September 9, 2021

5


I keep writing scenes and other random stuff. Thought they’d make for fun blog posts, titled ‘Tanglish Talks’. Do read, share, mock, comment, ring the bell icon, whatever 🙂 !

இரவின் மடியில் சாய்ந்திருக்கிறேன்.

அப்பொழுது ஒரு எண்ணம்:
இரவு ஆணா பெண்ணா?

ஆண் என்றல் மடியின் தசை
இரும்பு போல் இருக்கும்.
ஆனால் இந்த மடி பஞ்சு மெத்தை
மாதிரி அல்லவா இருக்கிறது!

நிச்சயம் இரவு ஒரு பெண் தான்…
என்னை தாலாட்டும் பெண்…
அன்னை போல் அல்ல,
அவளை போல்.

சந்திரன் போல் அவள் சிரிப்பு
என் முகத்தை மின்ன வைக்கிறது 
அந்த வெளிச்சத்தை மூடி மறைக்க,
எனக்கு தூக்கம் வர,
அவள் கருமேக கூந்தல் என் மேல்
போர்வை போல் படர்கிறது!

நான் நானல்லவா!
சற்றே திரும்பி மடியை லேசாக கிள்ளினேன்.

இன்று உனக்கு உறக்கம் இல்லை
என்று சிரித்தபடியே சென்று விட்டாள்.

அவள் நிழல் நீள நீள நான் சொன்னேன்:
உன் மேல் உறங்கிய அந்த சிறிதளவு நேரத்தில்
என் வாழ்க்கை விடிந்து விட்டது —
இனி உறக்கம் என்ன உறக்கம்!