I keep writing scenes and other random stuff. Thought they’d make for fun blog posts, titled ‘Tanglish Talks’. Do read, share, mock, comment, ring the bell icon, whatever 🙂 !
கொஞ்சம் powder பூசுவதை நிறுத்துவாயா?
அது பாண்ட்ஸ் கம்பெனி செய்யும் சதி
என்று உனக்கு புரியவில்லையா?
எல்லா பெண்களையும் ஒரே போல் மணக்க வைக்க ஒரு சதி.
pink-கலர் டப்பாவில் வரும்
அந்த வாசம்
ஆண் வர்கத்துக்கே ஒரு துரோகம்.
(St Johns School இளைஞர்களாக இருந்தாலும் ஆண்கள் ஆண்கள் தானே!)
கண்ணை மூடி விட்டு இவளா அவளா என்று கேட்டால்
முழிக்க வைக்கும் பட்டுபூச்சி-எடை அமிலம்.
என் கண்ணை கட்டி விட்டாலும் எனக்கு நீ என்று தெரிய வேண்டும்,
உடனே தெரிய வேண்டும்.
உ-ட-னே.
உன் lime soap -கலந்த வியர்வை என் மூக்கை துளைத்து
இந்த மெட்ராஸ் வெய்யிலில் என் முன் நிற்பது நீதான்
என்று one -two-three -ஜுட் சொல்வதற்குள்
என் மீதி நான்கு அறிவுகள் அறிய வேண்டும்!
இந்த அற்ப ஆசையை உன்னிடம் சொன்னால்
கோபித்து கொள்கிறாய்!
உன் ஒப்பனை விவகாரங்களில்
தலையிடுகிறேன் என்கிறாய்!
நீ தேங்காய் எண்ணெய் மின்னல்களுடன்
முடியை இறுக்க வாரும் பெண் இல்லை
என்று எனக்கு தெரியாதா?
உன் மார்பில் மஞ்சள் வாசம் இருக்காது என்று தெரியாதா?
உன் பின்னால் நாயாய் சுற்றுகிறேன்.
உனக்கே உரிய ஒரு மணத்தை
உண்டாக்கிக்கொள்
— அதானே சொல்கிறேன்?
என்னால் முடிந்தால் செய்ய மாட்டேனா?
அடுத்த வருடம் அப்பா என்னை மாடாய் இழுத்து செல்லும்
Commerce-ஐ தூக்கி எறிந்து விட்டு
வாலை ஆட்டிக்கொண்டே
நீ போக விரும்பும்
Science Group -இல் சேர மாட்டேனா?
US, UK -வில் விஞ்ஞானி ஆகி
உனக்காக ஒரு மணத்தை
உலகத்தின் மிக உயர்ந்த ரசாயன பொருட்களை கரைத்து
உருவாக்க மாட்டேனா?
அனால் அது வரைக்கும்
இந்த பத்தாயிரம் பேர் போடும்
powder வேண்டாமே!
Please!
bart
September 27, 2021
இருக்க வாரும் –> இறுக்க வாரும்
எங்கள் பூச்சு எதிரி “Gokul Sandal” அப்புறம் “Cuticura”
LikeLiked by 1 person
brangan
September 28, 2021
Thanks for that bart. Found this notebook and typed this out in such a hurry before rushing to an interview.
LikeLiked by 1 person
Ravi
September 28, 2021
Good one. “உன் lime soap -கலந்த வியர்வை என் மூக்கை துளைத்து” Liril ?
The distinct smell of Ponds when the train approaches Pallavaram station 🙂
LikeLiked by 1 person
chockool1
October 4, 2021
Scintillating imagination, Mr Rangan!
உங்கள் நடை மிக அருமை! தேங்காய் எண்ணெய் மின்னல்கள் – சிலாகிக்கிறேன்! வைரமுத்துவின் நித்திய சத்திய நித்திலமே … வரிகளை தங்கள் மூலமாக நினைவு கொண்டேன் / கொள்கிறேன்.
தூக்கி எரிந்து விட்டு – இதை மட்டும் தூக்கி எறிந்து விட்டு … என மாற்றவும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
I am finding you an equally felicitous writer in Tamil. Thanks so much for sharing your notes!
Ever your fellow passenger,
Chokkapan S
LikeLiked by 1 person
damilan
October 5, 2021
I’ve generally enjoyed your tanglish talks, but this one is veering towards a vairamuthuvian emphasis on bodily fluids that makes me uncomfortable.
Didn’t work for me, but hey it might for others….
LikeLike
brangan
October 8, 2021
damilan: bodily fluids? I thought it was mainly about the scent of a girl/woman…
LikeLike
damilan
October 9, 2021
I was referring to “உன் lime soap -கலந்த வியர்வை என் மூக்கை துளைத்து”
Unfortunately, any reference to scents following it was influenced by that image…
Couldn’t help but recall vairamuthu’s “சிந்தும் வேர்வை தீர்த்தமாகும்” which arguably was far more gross to yours truly’s picky sensibilities.
LikeLike