I keep writing scenes and other random stuff. Thought they’d make for fun blog posts, titled ‘Tanglish Talks’. Do read, share, mock, comment, ring the bell icon, whatever 🙂 !
“Happy Pongal” என்று சொன்னால் எனக்கு ஒரு மாதிரி இருக்கும்.
இது உழவர் திருநாள்.
நான் ஏரை தொட்டது கூட கிடையாது.
மாடு என்றால் பயம்.
கொம்பை வைத்து கீறி விடும் என்ற பயம்.
கிராமங்களுக்கு சென்றிருக்கிறேன்.
அனால் கிராமங்களில் வாழ்ந்ததில்லை.
பாரதிராஜா திரையில் காண்பித்ததோடு சரி.
இந்நிலையில் “Happy Pongal”-க்கு நான் உரியவனா?
என் கொள்ளுத்தாத்தாத்தாவின் கொள்ளுத்தாத்தா
ஒருவேளை உழவராக இருந்திருப்பாரோ?
ஏனென்றால் என் அம்மாவின் குடும்பத்தில்
இன்னும் சில பேர் கிராமங்களில் வசிக்கிறார்கள்.
ஏதோ சிறு வயதில் சென்ற ஞாபகம்.
(மாட்டு பயம் அங்கே தான் வந்ததா?)
இந்த சிந்தனைகளில் logic இல்லைதான்.
அப்படி பாத்தீங்கன்னா “Happy Deepavali”-உம் அர்த்தமற்றது.
கிருஷ்ணன் என்று ஒருவர் இருந்தார்.
அவர் நரகாசுரனை டிஷும்-டிஷும் செய்து கொன்றார்.
இதிலெல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை.
(கடவுள் நம்பிக்கையே இல்லையா என்று கேட்கிறீர்களா?
அதை இன்னொரு நாள் சொல்கிறேன்.)
“Happy Pongal” என்று சொன்னால் எனக்கு ஒரு மாதிரி இருக்கும்.
நாம் உழவர்களுக்காக என்ன செய்கிறோம்?
இப்பொழுது கூட TV-இல் அவர்களின் போராட்டங்களை பார்க்கிறோம்.
பார்த்துக்கொண்டே, அவர்கள் வளர்த்ததை உண்கிறோம்.
Pandemic-இன் போது கொஞ்சம் நிறையாவே உண்டிருக்கிறேன்
என்று என் தொப்பை கேலி செய்கிறது.
அனால் அந்த politics-க்கு நான் போக விரும்பவில்லை.
ஒரு தமிழனாக எல்லோருக்கும் “Happy Pongal” சொல்கிறேன்.
பழக்க தோஷம் என்றே வைத்துக்கொள்ளுங்களேன்.
இந்த கிருமி-காலத்தில் “happy” என்ற வார்த்தைக்கு மதிப்பு மிகவும் கூடிவிட்டது.
முடிந்தவரை happiness-ஐ நம்முள் அடைத்து வைப்போம்,
ஒரு அணில் உணவு சேர்ப்பதை போல.
sad-ஆக இருக்கும் நாட்களில் இந்த happiness-ஐ
ஒரு teaspoon மருந்து போல
சர்க்கரை கலந்து நம் மனதுக்கு ஊட்டுவோம்.
“Happy Pongal” என்று சொன்னேன் அல்லவா?
கொஞ்சம் மாற்றுகிறேன்.
Happy everyday, everybody.
Jeeva+Pitchaimani
January 13, 2022
Oh somehow I read this in the protagonist’s voiceover of a GVM movie.
LikeLiked by 1 person
Aravindan R
January 13, 2022
நான் ஏரை தொட்டது கூட கிடையாது. மாடு என்றால் பயம்.
கொம்பை வைத்து கீறி விடும் என்ற பயம்.
கிராமங்களுக்கு சென்றிருக்கிறேன். ஆனால், கிராமங்களில் வாழ்ந்ததில்லை.
This is the எனக்கு தெரிஞ்சதெல்லாம் சமையல்கட்டு, புகை, வரதுக்குட்டி moment for BR 🙂
Happy everyday!
LikeLike
Chitra
January 13, 2022
Happy everyday to you too, BR. Nice write-up, as always.
LikeLike
lakshmi
January 13, 2022
sad-ஆக இருக்கும் நாட்களில் இந்த happiness-ஐ
ஒரு teaspoon மருந்து போல
சர்க்கரை கலந்து நம் மனதுக்கு ஊட்டுவோம்.
one of those மருந்து for me is any old post on your blog.
LikeLike
Yajiv
January 13, 2022
@Jeeva: Welcome back, sir!
Happy Everyday to BR and all others!
LikeLiked by 1 person
bart
January 13, 2022
“கொம்பு வைச்ச சிங்கம்டா” பார்த்தா, கொம்பு வைச்ச மாட்டின் மேல பயம் வராதாம் பாஸ். பாத்துட்டு சொல்லுங்க.
பொங்கல், தமிழ் புத்தாண்டு இதுக்கெல்லாம் ஆங்கிலத்தில் வாழ்த்துவது ஒத்து வராது. அதனால, “அனைவருக்கும் ஒவ்வொரு நாளும் சர்க்கரைப் பொங்கல் போல இனிக்க வாழ்த்துக்கள்”.
LikeLike
Eswar
January 13, 2022
Poo nu sollalaam
Pushpam nu sollalaam
Neenga solra maathiriyum sollalaam.
Happy Days, BR 🙂
LikeLiked by 1 person
Kannaa
January 15, 2022
maattai kandaal bayam paravaaillai; vimarsagarukku paattai kandaal bayam endraal thaan sikkal 🙂 “thai porandhaa vazhi porakkum, thangame thangam…”(KVM) – anaivarukkum iniya nal vaazhththukkal !
LikeLike