By ஓர் உயிரினம்
2006
பதினேழு வயது
பன்னண்டாம் வகுப்பு
படபடக்கும் நெஞ்சு
கத்திரி வெயில்
காலை பொழுது
கணிப்பொறி முன் நான்
எலியைத் தட்டிக்கொண்டே இருக்கிறேன்
என் மதிப்பெண்ணை எதிர்பார்த்தும் எதிர்பாராமல்
நெஞ்சடைக்கிறது
பயம் பீறிட்டு வருகிறது
Pass-ஆனால் நல்ல கல்லூரி
Fail-ஆனால் சுமாரான கல்லூரி
2022
படிப்பின் படிக்கட்டுகள்
பலதூரம் கடந்து வந்தபின்
குளிர்பனி காலம்
குடியரசு தினம்
காலை பொழுதில்
கணிப்பொறி முன் நான்
அஸ்ஸாமிலிருந்து ஒரு வழக்கறிஞர்
அவலத்துடன் கூறினார்
எலியைத் தட்டிக்கொண்டே இருந்தோம்
என் அக்காவின் பெயர்
NRC பட்டியலில் உள்ளதா என்று
நெஞ்சடைக்கிறது
பயம் பீறிட்டு வருகிறது
Pass-ஆனால் குடிமகள்
Fail-ஆனால் detention center
குடியரசு தின வாழ்த்துக்கள் இந்திய குடிமக்களே!
rmahalik
January 26, 2022
Well written. Didn’t foresee the message coming….moved me. Interestingly watched Veyilmarangal, the Malayalam movie yesterday. It has one poignant scene where symbols are more important than the people. Matter of fact, realistic, well made cinema.
LikeLike
H. Prasanna
February 4, 2022
Timely, or untimely.
https://www.ndtv.com/india-news/assam-man-fighting-legal-battle-at-foreigners-tribunal-even-after-his-name-was-in-nrc-dies-by-suicide-2745783
LikeLike