Tanglish Talks: “Friends”

Posted on May 2, 2021

3


I keep writing scenes and other random stuff. Thought they’d make for fun blog posts, titled ‘Tanglish Talks’. Do read, share, mock, comment, ring the bell icon, whatever 🙂 !

About this installment: This is part of a metro-centric screenplay I am trying out. It has two characters who become friends despite an age gap. (They are not the central characters, though — at least not yet.) It’s still very, very rough but I think I may find something along the way this may go. 

SCENE

RAMYA, a sixty-ish woman is buying samosas for her family at a chaat shop. She is lightly wrinkled. Her scalp is going bare at places, with little tufts of hair peeking out here and there. But she radiates energy and positivity. It’s a tiny, tiny shop (where you share tables) and she sits down at a table to have the sev puri she has bought for herself. Across her is an early- thirty-something girl, NANDINI, with a depressed look. She is having her dahi puri mechanically.

RAMYA: Hi!

Nandini looks up and nods mechanically. Ramya gets the feeling something is wrong and the girl needs someone to talk to.

RAMYA: நான் பாத்தவங்கள-லாம் பிடிச்சி என்ன-ஏது-னு கேக்கற பைத்தியம் இல்லே.

Nandini looks up startled.

RAMYA: But ஒன்ன பாத்தா கேக்கணும் போல இருக்கு. நீ “Mind your own business’-னு சொன்னா, it’s okay. But பேசணும்-னு தோணிச்சு-னா I am right here.

Nandini looks unsure. She continues to eat her chaat.

RAMYA: Okay, ஒண்ணே ஒன்னு promise பண்ணு. என்கிட்டே இல்லே-னாலும் வேற யாரு-கிட்டயாவது — friend, அம்மா, இந்த கடை-க்கு வெளியில door தரக்கரவன் —  யாரு-கிட்டயாவது பேசு. உள்ள இருக்கற வெஷத்த வெளியே கக்கிடு. இல்லேன்னா அந்த வெஷம் ஒடம்புல ஊறி போயி…

Nandini cuts her off.

NANDINI: Aunty.

RAMYA: Ramya.

NANDINI: Huh?

RAMYA: இந்த aunty-uncle- லாம் எனக்கு பிடிக்காது. I am just Ramya.

Despite her earlier bad mood, Nandini smiles.

NANDINI: பெரியவங்கள பேர் சொல்லி…

RAMYA: … கூப்பிட கூடாது-னு எந்த book-ல எழுதிருக்கு-னு காமி. அடுத்த நிமிஷமே “aunty”-னு சொல்லு, “பாட்டி”-னு சொல்லு, என்ன வேணா சொல்லு…

NANDINI laughs out loud. Some droplets of curd from her dahi puri fall on Ramya’s hand.

NANDINI: Oh sorry.

Nandini takes out a napkin and wipes Ramya’s hand.

RAMYA: இந்த sorry-thank you- லாம் கூட எனக்கு allergy. But okay. First meeting- லேயே உன்ன பயமுறுத்த வேணாம்.

Nandini has cheered up considerably.

NANDINI: அப்போ we will meet again- னு சொல்லறீங்களா?

RAMYA: Definite-ஆ meet பண்ண மாட்டோம்-னு  எந்த book-ல எழுதிருக்கு-னு காமி. அடுத்த நிமிஷமே tata-bye-bye சொல்லிட்டு நீ ஒன் வழி, நான் என் வழி போயிடலாம்.

NANDINI: நீங்க…

RAMYA: …krack-ஆ-னு கேக்க போறியா?

NANDINI laughs again

NANDINI: psychologist- ஆ?

RAMYA shakes her head.

RAMYA: நானும் ஒன் வயச தாண்டி வந்திருக்கேன். That’s all. Love matter-ஆ?

NANDINI sighs and nods.

NANDINI: A big, big, big, big break-up.

RAMYA reaches out and holds NANDINI’s hand.

RAMYA: Sorry.

Nandini shakes her head.

NANDINI: It’s okay.

RAMYA: No, it’s NOT okay. இல்லே-நா உன் மூஞ்சிய இந்த மாதிரி தொங்க விட்டு உக்காந்திருக்க மாட்டே.

NANDINI hesitates a bit, and then nods, acknowledging what RAMYA said.

RAMYA: First love- ஆ?

NANDINI nods.

RAMYA sighs and smiles.

RAMYA: அப்போ நீ காலி.

NANDINI looks at questioningly.

RAMYA: நான் சொல்ல போறது முரளி-படத்துல வர்ற dialogue மாதிரி இருக்கும்…  (pause) முரளி யாரு-னு தெரியும்-லே?

NANDINI nods.

NANDINI: Atharva- வோட அப்பா. ‘இதயம்’ முரளி.

RAMYA: Oh. அவன முரளி-னு கூப்பிடுவே. நான் மட்டும் aunty-யா?

NANDINI smiles again.

NANDINI: ஐயோ… Okay, RAMYA…

RAMYA: So அந்த dialogue என்ன-னா: Heart வந்து… பீங்கான் தட்டு மாதிரி. ஒரு தடவ ஒடஞ்சிடிச்சு-னா என்ன தான் ஒட்ட வெச்சாலும் முன்ன மாதிரி இருக்காது. விரிசல்களோட தான் இருக்கும்.

NANDINI looks down at the table.

RAMYA: But it will keep beating. And life will go on. என்ன பாரு?

NANDINI looks up.

NANDINI: உங்களுக்கும்…?

RAMYA: “”உனக்கும்” -னு சொல்லு… காதலுக்கு வேணா மரியாதை குடு, Vijay மாதிரி. வயசுக்கு குடுக்காதே. ஒன்ன விட கொஞ்சம் — okay, நெறய – birthday candles ஊதிருக்கேன். அவ்வ்ளோதான். அது ஒண்ணும் பெரிய achievement இல்ல.

NANDINI smiles and shakes her head.

NANDINI: நீங்க… okay, நீ நெஜமாவே…

RAMYA: நெஜமாவே?

NANDINI searches for a word.

NANDINI: Different.

RAMYA: அப்போ தானே life interesting-ஆ இருக்கும்? எல்லாருமே same-ஆ இருந்தா இந்த கடைல கிடைக்கற samosa-க்கும் நமக்கும் என்ன வித்யாசம்?

NANDINI smiles and nods.

RAMYA: வண்டி இருக்கா?

NANDINI shakes her head.

RAMYA: நான் வீட்ல drop பண்ணறேன்.

NANDINI: இல்ல… நான் Uber…

RAMYA: Okay. Uber-கு குடுக்க போற காச எனக்கு குடு. வழில உன் கதை என்ன-னு சொல்லு. நானும் என் கதை என்ன-னு சொல்லறேன்.

They both get up.

RAMYA: ஒண்ணு notice பண்ணியா?

NANDINI looks questioningly.

RAMYA: Your உம்மணா-மூஞ்சி is gone.

NANDINI smiles.

CUT TO FLASHBACK.

Posted in: Tanglish Talks