Tanglish Talks: “The confession”

Posted on May 9, 2021

4


I keep writing scenes and other random stuff. Thought they’d make for fun blog posts, titled ‘Tanglish Talks’. Do read, share, mock, comment, ring the bell icon, whatever 🙂 !

About this installment: This is from that screenplay, from which you may have read an accident scene (“A scene in Kuwait”) and a grandmother-granddaughter scene (“Presenting… Anuradha”). The following scene is between the two characters who were in the car during the accident. There, we hear the voiceover of the first character. Here, we get a bit of backstory about the second one,.

SCENE 8

CROWDED PRISON CELL: ANJAIAH comes to KAALIDAS. 

ANJAIAH: உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்-ண்ணே.

KAALIDAS looks at him questioningly.

ANJAIAH: இல்ல. இந்த கிஷ்டன்-காரங்க பாதிரி கிட்ட பாவ மன்னிப்பு கேப்பாங்களே. அந்த மாதிரி.

KAALIDAS: அந்த பொண்ணு செத்தது ஒரு accident-டா. 

ANJAIAH: அது இல்லே-ண்ணே. இது வேற.

KAALIDAS: சரி, சொல்லு.

ANJAIAH: இங்க நெறய பேருஇருக்காங்க. அந்த ஓரத்துக்கு போலாம்.

They sit down. ANJAIAH narrates his story, which is shown visually.

மத்தவங்க மாதிரி நான் இங்க காசுக்காக வரல-ண்ணே! ஊர்ல எல்லாரும் என்ன உதவாக்கரை-னு சொல்லுவாங்க. ஆனா நான் அத பெருசா கண்டுக்கல. நானே என்ன உதவாக்கரை-னு நெனைச்சிப்பேன். அந்த வார்த்தை-ல ஒரு கெத்து இருக்கு-ண்ணே. பொறுப்பு இல்லாம பருப்பு மாதிரி வாழறோம்-ங்கற கெத்து. 

எனக்கு ஒரு friend இருந்தான். அவனும் ஒரு உதவாக்கரை. ஆனா அவன் அண்ணன் செம்ம கெத்தான ஆளு. கர்ணன்னு பேரு. அவன் வர்றான்-னு தெரிஞ்சா தெரு-ல ஈ-காக்கா இருக்காது.

இன்னி மட்டும் அவன் என்ன பண்ணிடிருந்தான்-னு தெரியாது. எந்திரிச்சதுலேந்து படுக்கற மட்டும் கஞ்சா, அபின்-னு அவன் ஒடம்புக்குள்ள போயிட்டே இருக்கும். அவன சுத்தி அடியாள் இருப்பாங்க, தேவிடியா இருப்பாங்க… 

எனக்கும் என் friend-க்கும் மொத வாட்டி அவன் தான் நடத்தி வச்சான். ஒரு நாள் கூப்பிட்டான். ரெண்டு பொண்ணுங்கள காட்டி “பண்ணறீங்களாடா?” னு சிரிச்சிக்கினே கேட்டான். அந்த பொண்ணுங்களும் சிரிச்சிதுங்க.

எங்களுக்கு ஒரே பயம். ஒரு பொண்ண பாத்து சரியா பேசினது கூட கெடயாது. கர்ணன் அவனோட ஆள room-க்கு வெளியே நிக்க வெச்சான். அந்த ஆள் கையில பெரிய துப்பாக்கி. ரெண்டு கை நீளம். இருவது தோட்டா சுடர வரைக்கும் time தர்றேன் -னு சொன்னான். அதுக்குள்ள நாங்க முடிச்சாகனும். 

பொண்ணுங்க ready ஆயிட்டாங்க. மொதல் தோட்டா சத்தம் கேட்டிச்சி.  அது என்ன-னு தெரிலஅண்ணே, அந்த நிமிஷம் உள்ள இருந்த பயமெல்லாம் போச்சு.  ஒரு பத்து நிமிஷத்துக்கு நான் உதவாக்கரை இல்லே-னு தோணிச்சு. செமயா இருந்திச்சு. நானும் என் friend-உம் வெளிய வந்த போ ஏதோ கிரிக்கெட் World Cup  ஜெயிச்சு சாதனை பண்ண மாதிரி எல்லாரும் கை தட்டினாங்க, whistle அடிச்சாங்க.

கர்ணன் எங்க ரெண்டு பேருக்கும் ஒரு gun குடுத்தான். ரெண்டு துப்பாக்கிலயும் ஒரு தோட்டா. ஒரே ஒரு தோட்டா. இப்ப பாதி ஆம்பள ஆயிட்டீங்க. யாரையாவது சுட்டு கொல்லுங்க. அப்போ முழு ஆம்பளையா ஆயிடுவீங்க-ன்னான்.

என் friend-க்கு பயமாயிடுச்சு. ஓடிட்டான். எல்லாரும் சிரிச்சாங்க. உள்ள எங்களோட படுத்த ரெண்டு பொண்ணுங்களும் சிரிச்சாங்க. “Gun-லாம் சுட தெரியுமா ல சின்ன பையா”-னு யாரோ சொன்னாங்க. உள்ள ஏதோ பண்ணிச்சு. துப்பாக்கி எடுத்தேன். Cinema-ல பாத்தா மாதிரி புடிச்சேன். கண்ணால gun-வழியா பாத்தேன். இங்க திருப்பினேன். அங்க திருப்பினேன். திடீர்னு ஒரு ஆள பாத்தேன். 

வைக்கோல்-அ அள்ளிட்டிருந்தான். இது மட்டும்  உதவாக்கரை-ங்கற கெத்து இருந்துச்சு. ஆனா இப்ப கடவுள் அளவுக்கு கெத்து வந்திச்சு. அவன் உயிர் என் கையில. நான் சுட்டேன்-நா அவன் காலி.

We see ANJAIAH’s finger pressing on the trigger and releasing it, pressing and releasing, and he finally presses his finger and we hear a shot and CUT back to prison.

KAALIDAS: அட பாவி. 

ANJAIAH: அவன் சாவலே-ண்ணே. சுட்டப்போ துப்பாக்கி-ய கொஞ்சம் தூக்கி புடிச்சேன். அவனுக்கு உயிர் பிச்சை குடுத்தேன். ஆனா அந்த ரெண்டு நிமிஷம் ‘கொல்லலாமா வேணாமா”-னு நெனச்சேன் பாரு? (begins to sob) அதுனால தான் இன்னிக்கு சாக கெடக்கறேன். 

KAALIDAS holds the weeping ANJAIAH and comforts him.

KAALIDAS: பைத்தியம் மாதிரி பேசாதே. அப்போ நான் என்ன தப்பு செஞ்சேனான்…

ANJAIAH looks at him, with tear-stained eyes. KAALIDAS looks away guiltily.

We see MALAYALI nurse’s face… 

A montage of shots of KAALIDAS that shows KAALIDAS’s growing closeness with this woman.

…and then pull back from her face. Beside her is BOSS’s WIFE. It’s KAALIDAS’s first day at work. It’s a palatial house. Many big dogs are barking. ANJAIAH is the gardener there. He has brought KAALIDAS over from India. He introduces KAALIDAS to BOSS’s WIFE. (Boss is always travelling, and away from home.)

KAALIDAs drives BOSS’s WIFE around.
KAALIDAS chats with MALAYALI NURSE. (Hesitantly)
KAALIDAs washes and polishes car.
KAALIDAS says hello to MALAYALI NURSE. (More confidently.)
KAALIDAs drives BOSS’s KIDS around.
Sudden CUT TO:
KAALIDAS in bed with MALAYALI NURSE.

CUT back to PRISON:

KAALIDAS (MIND-VOICE): ஒனக்கு துரோகம் பண்ணிட்டேனே, THANGAPUSHPAM. (He bangs his head against prison bars.) அதனால தான் இன்னிக்கு நான் இங்க இருக்கேனா?

He presses his head hard against the iron bars of the cell door until the bars almost seem to sink into his flesh.

SCENE 9

Posted in: Tanglish Talks